Thursday, 19 February 2015

20.02.2015 நக்கீரன் வார இதழில் வெளிவந்த செய்தி

முதல்வர் வேட்பாளராக ஜெய லலிதா, கலைஞர், விஜயகாந்த் களத்தில் இருக்கிறார்கள். இதே நம்பிக்கை பா.ஜ.க.வுக்கும் இருக்கிறது. பா.ம.க. 2016-ல் அரசியல் மாற்றத்திற்கான மாநாட்டை சேலத்தில் நடத்தி அதில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக பிரகடனப் படுத்தியிருக்கிறார் மருத்துவர் ராமதாசு. மாநாட்டிற்கு முன்னதாக நடந்த பா.ம.க.வின் தலைமை சிறப்பு பொதுக் குழுவில் இதற்கான ஒப்புதலைப் பெற்றனர். மாலையில் நடந்த அரசியல் மாநாட்டிற்கு தமிழகம் முழுவதுமிருந்தும் பா.ம.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக லட்சக்கணக்கில் திரண்டிருந்தனர். சேலம் மாநகரம் முழுவதும் பா.ம.க.வின் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. 

மனைவி மற்றும் இரண்டு குழந்தை களுடன் மாநாட்டிற்கு வந்திருந்த கடலூர் ராமகிருஷ்ணன், ""முதல்வர் வேட்பாளராக சின்ன அய்யாவை அறிவிக்கப் போறாங்க. அதை காது குளிர கேட்கவே குடும்பத்துடன் வந்திருக்கேன்'' என்றார் உணர்ச்சிவயப்பட்டவராக. 

கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டிருந்ததால் ரொம்பவே சிரமப் பட்டார்கள் இளைஞரணியினர். மாநாடு துவங்கியதும் அன்புமணியை முன் னிறுத்தும் பொதுக்குழு தீர்மானத்தை வாசித்தார் ஜி.கே.மணி.

இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் பேசிய அனைவரும் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளை விமர்சித்தும் இக்கட்சிகளால் வீழ்ச்சியடைந்த தமிழகத்தை மீட்கும் ஆற்றல் அன்புமணிக்கு மட்டுமே இருக்கிறது என்னும் கருத்தை வெளிப் படுத்தினார்கள். தர்மபுரி முன்னாள் எம்.பி. செந்தில், ""சுகாதாரத்துறையில் 50 ஆண்டுகாலம் செய்து முடிக்க முடியாத பணிகளை ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்தவர் அன்புமணி. 2009-ல் இந்தியா வந்த பான்- கீ- மூன், அன்புமணியை அவரது அலுவலகத்துக்கு தேடிச்       சென்று சந்தித்தார்.  "சுகாதாரத் துறையில் அன்புமணி காட்டிய உறுதிப்பாடும் அவர் ஏற்படுத்திய மறுமலர்ச்சியும்தான் அவரை நான் தேடிச் சென்று பார்க்க வைத்தது' என்றார். மத்திய அரசில் நிகழ்த்திய சாதனைகளை மாநிலத்தில் நடத்திக் காட்டும் அக்கறையும் ஆற்றலும் ஒருசேரப் பெற்ற ஒரே தலைவர் அன்புமணிதான்'' என்று புகழ்ந்து தள்ளினார்.

வழக்கறிஞர் கே.பாலு, ""தேசிய ஊரக சுகாதார இயக்கம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு, மது விலக்கு கொள்கைக்காக அயராது போராட்டம், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை, போதைப் பாக்குகளுக்கு தடை, புகையிலை பொருட்களில் உறைகள் மீது எச்சரிக்கை படம் என சமூகத்தின் சுகாதாரத்திற்காக எண்ணற்ற பணிகளை நிறைவேற்றியவர் அன்புமணி. முதல்வர் வேட்பாளராக நிற்பதற்கு அனைத்து தகுதியும் பெற்றவர்'' என்றார் மைக்கைத் தட்டியபடி.

தனது பேச்சில் எப்போதும் சாதி அரசியலை முன்னிலைப்படுத்தும் காடுவெட்டி குரு, இந்த மாநாட்டில் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசினார். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளையும் கடுமையாக வறுத் தெடுத்த குரு, ""தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக நிற்கும் ஒரே தகுதி அன்புமணிக்கு மட்டுமே உண்டு. அவரைப் போன்ற சிறந்த மதி நுட்பம் கொண்ட தலைவர்கள் தமிழக அரசியலில் இல்லை'' என்று வெடித்தார். 

ஏற்புரை நிகழ்த்திய அன்புமணி, தம்மிடம் தந்துள்ள இந்த பொறுப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துவிட்டு, ""காமராஜருக்குப் பிறகு ஒரு அறிஞருக்கு (அண்ணா) வாய்ப்பு தந்தீர்கள். அடுத்து ஒரு கலைஞருக்கு வாய்ப்பு தந்தீர்கள், அடுத்து ஒரு நடிகருக்கும் (எம்.ஜி. ஆர்.), நடிகைக்கும் (ஜெயலலிதா) வாய்ப்பு தந்தீர்கள். இதுவரை ஆக்டருக்கு வாய்ப் பளித்த நீங்கள், இனி டாக்டருக்கு (அன்பு மணி) வாய்ப்பளி யுங்கள். என்னைப் பொறுத்தவரை, முதல் வர் பதவி என்பது அரசின் நிர்வாகப் பதவி அவ்வளவே.  இளைஞர்களால்தான் தமிழகத்தில் ஒரு சிறந்த நிர்வாகத்தை தர முடியும். புதிய சிந் தனை, புதிய புரட்சி தமிழகத்திற்கு அவ சியம். அதனை நிச்சயம் பா.ம.க. ஏற்படுத்தும்'' என்று கூறிவிட்டு, பா.ம.க. ஆட்சிக்கு வந் தால் எந்த மாதிரியான நிர்வாக சீர்திருத்தத்தை ஏற்படுத்துவோம் என்பதை விவரித்தார்.

இறுதியில் பேசிய மருத் துவர் ராமதாசு, திராவிட கட்சிகளால் தமிழகம் தாழ்ந்து கிடக்கும் நிலையையும் தமிழகத் தில் இதுவரை கூட்டணிகள் எப்படி உருவானது என்பதையும் தனக்கேயுரியபாணியில் விமர்சனம் செய்துவிட்டு, ""சிறந்த முதலமைச்சருக்கு தேவையான கல்வி, செயல் திறன், மதி நுட்பம், மக்கள் நலனில் அக்கறை, தேசிய தலைவர்களுடன் நட்பு, கறை படியாத கரங்கள், உலகத் தலைவர்களுடன் தொடர்பு உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் பெற்றவர் அன்புமணி. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்ததுடன், சிங்களப் படைகளின் போர்க் குற்றங் களுக்காக பன்னாட்டு விசாரணையை நடத்தவேண்டுமென உரத்து பேசியவர் அன்புமணி. சுகாதாரத்திற்காக உலக அளவிலான 3 உயரிய விருதுகளை பெற்ற ஒரே நபர் அன்புமணிதான். இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அவரை விட்டால் முதல்வர் வேட்பாளருக்கு  தகுதியான நபராக தமிழகத்தில் யார் இருக்கிறார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார். தொண்டர்களோ ஆர்ப் பரித்தனர்.

பதிவுகளை தொடர