Wednesday 5 June 2013

தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளுங்கள் பாட்டாளி சொந்தங்களே

மாணவ பருவமுடைய பெரும்பான்மையானவர்களின் தினசரி வேலைகளில் ஒன்று இணையதளத்தில் உலவுவது. அதன் படி இன்று ஒருவரை பற்றிய செய்திகள், அல்லது அவரின் வரலாறு, விமர்சனம், சாதனைகள் என்று ஒரு தனி நபர் பற்றிய விவரங்களை இன்று நூலகங்களிலும், அறிஞர்களிடமிருந்தும் தெரிந்து கொள்வதை விட இணையதளத்தில் தேடி தெரிந்து கொள்வதே அதிகம்.
அந்த வகையில் இன்றைய அரசியல் சூழலில் மருத்துவர் ஐயாவை பற்றி நாம் ஏதாவது தேடினால், அவைகள் பெரும்பாலும் விமர்சனங்களாகவே இருக்கும். இணையதளத்தில் இலவசமாக கூகுல் வழங்கும் ப்ளாகர் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லோரும் அவர்களின் சொந்த கருத்தை அல்லது அவர்கள் இயக்கம் அல்லது கொள்கை சார்ந்த கருத்துக்களை பதிந்து வருகின்றனர் இதில் சிலர் தன்னுடைய அரிப்பை தீர்த்துக்கொள்ளவும் ஒரு குழுவாக அலைகின்றனர். அப்படி இன்று இணையதளத்தில் ஒருவர் ஏதாவது தேட முற்படும் பொழுது அவர்களின் பார்வைக்கு வெறும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் மட்டும் வந்து விழுவதினால், முதன் முதலின் இணையதளத்தில் படிப்பவர் அந்த ப்ளாக் எழுத்தாளரின் சிந்தனைக்கு மாறிவிடுகிறார், இதன் மூலம் அவர் முதலில் படித்த கருத்துகளை மையமாக கொண்டே தர்க்கம் செய்கிறார். நாம் இதை எப்படி களைவது ? தொழில் நுட்ப ரீதியிலான நம் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு நாம் தொழில் நுட்ப ரீதியில் மட்டுமே பதிலடி கொடுக்க முடியும். நாட்டில் ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியாத பலர் இன்று இணையதளத்தில் கொடி கட்டி பறக்க காரணம் அவர்களுக்கு அம்பேத்கர் வாங்கிக்கொடுத்த இட ஒதுக்கீடு, இதன் மூலம் கல்வி அறிவு பெற்று, இணையத தொழில்நுட்பம் அறிந்து இணையதளத்தில் பெரும்பான்மையாக திகழ்கிறார்கள். உண்மையான பெரும்பான்மையான நாமோ இணையதளத்தில் சிறுபான்மையாக நிற்கவேண்டியுள்ளது, காரணம் நம் சமூகத்திற்கான சமூக நீதி இல்லாமை. இதன் மூலம் நாம் தலித்துகளின் நவீனத்தீண்டாமைக்கு ஆளாகிறோம். இன்று முகநூலை பயன்படுத்தும் பலருக்கு இந்த அனுபவம் ஏற்ப்பட்டிருக்கும் பலரும் இப்பல்லாம் வன்னியர்கள் கூட முகநூல் பயன்படுத்தரிங்களா!!!  என்ற நவீன தீண்டாமைக்கான வார்த்தையை எதிர்கொண்டிருப்பார்கள்.

நாம் என்ன தான் முகநூலில் பக்கம் பக்கமாக எழுதினாலும், இணையதளத்தில் தேடும் பொழுது ப்ளாகரில் உள்ள பதிவுகளே முன்னணியில் வரும், இதற்க்கு காரணம் ப்ளாகர் கூகுளின் சொந்த இணைய தொழில்நுட்பம், எனவே நாம் முகநூலை விட ப்ளாகரில் சற்று ஆர்வம் காட்ட வேண்டியது அவசியமாகிறது. நம்மை பற்றிய ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொள்ள நாமும் ஆயிரம் ஆயிரம் கட்டுரைகளை ப்ளாகர் மூலம் எழுத வேண்டியுள்ளது, எனவே நம் சொந்தங்கள் உங்களின் படைப்புகளை நம்முடைய இந்த ப்ளாகரை பயன்படுத்தி பதியுமாறு வலியுறுத்துகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி இணையதள குழுவாகிய இவ்வலைப்பூவில் உங்களுடைய படைப்புகள் ஏதேனும் பகிர விருப்பப்பட்டால், ravananpadayatchi@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யலாம், ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக்கு பிறகு தங்களின் கட்டுரை இவ்வலைப்பூவில் பதியப்படும்.

தங்களின் படைப்புகள் விமர்சனம்,ஆய்வு,அரசியல்,கவிதை,கட்டுரை,வரலாறு ,கலை, அறிவியல் போன்ற உங்கள் படைப்புகள் உங்களின் சொந்த சரக்காக இருக்க வேண்டியது அவசியம். வேறு தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட கட்டுரையாக இருப்பின் கண்டிப்பாக உங்கள் படைப்பு இவ்வலைப்பூவில் பதியப்படாது, மேலும் இவ்வலைப்பூ நிர்வாக குழு உங்கள் பதிவை ஆய்வு செய்து இவ்வலைப்பூவில் பதிந்த பின்னரே உங்கள் படைப்பை நீங்கள் முகநூல் போன்ற வேறு சமூக வலை தளங்களில் பகிரப்பட வேண்டும்.

                                                                                        - பா.ம.க இணைய நிர்வாகக் குழு.

No comments:

Post a Comment