Friday 24 July 2015

“இது அன்புமணி ஃபார்முலா !”-விகடன் 22.07.2015

“இது அன்புமணி ஃபார்முலா !”-விகடன் 

முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்துக் களம் இறங்கியிருக்கிறார் அன்புமணி. ‘மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி’ எனக் கோஷம் போட்டுக் கொடி பிடித்துக் கிளம்பியிருக்கிறது பா.ம.க.
”எப்படி ஒரு தரப்பில் இருந்து வரவேற்பைப் பார்க்கிறோமோ, அதேபோல இன்னொரு தரப்பில் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். கேலி, கிண்டல்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் இளைய தலைமுறையினரோடு நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்கிறோம். அதுதான் சமூக வலைதளங்களின் அழகு!”

”என்ன மாற்றம், என்ன முன்னேற்றம் திட்டமிட்டிருக்கிறீர்கள்?”

”50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி, மக்கள் மனதில் பெரும் சலிப்பை உண்டாக்கியிருக்கிறது. காமராஜர் 12,000 பள்ளிகளைத் திறந்தார். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து 7,000 டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறார்கள். தமிழனை போதையிலேயே வைத்திருக்கும் டாஸ்மாக் ஃபார்முலாதான், அவர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திருக்கும் ஒரே விஷயம்!
56 சதவிகித தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு சென்ட் நிலம்கூட இல்லை. 80 சதவிகித மக்களின் மாத வருவாய் 5,000 ரூபாய்க்கும் கீழ். இந்த நிலைமையை மாற்றவே திட்டமிடுகிறோம். தமிழ்நாட்டில் சிந்தனை, ஆட்சி, திட்டச் செயல்பாடுகள் எனப் பல நிலைகளிலும் நிலவும் தேக்கநிலையை உடைத்து, சுறுசுறுப்பான ஓர் அரசு நிர்வாகத்தைக் கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். நான் ஒன்றும் சும்மா கேட்கவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் சேவையை, நான்தான் அறிமுகப்படுத்தினேன். அதற்கு முன்னரும் ஆம்புலன்ஸ் இருந்தது. ஆனால், நான் அமெரிக்க மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் முறையை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தேன். அதனால் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்தது. அதேபோல புகையிலை நிறுவன முதலாளிகளின் லாபியையும் மீறி, புகையிலை தயாரிப்புகளில் ‘புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு’ என்ற எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்தேன். தொலைக்காட்சி, சினிமாக்களில் மது அருந்தும் காட்சிகளின் போதும், எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தேன். இப்படிக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் என்னை நிரூபித்த பிறகுதான், அதேபோல தமிழ்நாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்பு கேட்கிறேன்!”
”தேர்தல் வெற்றிக்கு ஒபாமா வியூகங்களை மோடி பின்பற்றியதுபோல, நீங்கள் மோடி ஃபார்முலாவைக் கையில் எடுத்திருக்கிறீர்களா?”
”அப்படி இல்லை… இது அன்புமணி ஃபார்முலா. ‘மாற்றம் வேண்டும்’ என்ற மக்களின் மனநிலையை எந்தெந்த வழிகளில் செயல்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் செயல்படுத்துவோம். சமூக வலைதளங்கள், போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் முதல் குக்கிராமங்கள் வரை எங்கள் எண்ணத்தைப் பதியச் செய்கிறோம். என் வழக்கமான பணிகள் தவிர, ஒவ்வொரு நாளும் ஒரு பொதுக்கூட்டம் மூலம் மக்களைச் சந்திக்கிறேன். மற்றபடி இது ஒபாமா ஃபார்முலாவும் அல்ல… மோடி ஃபார்முலாவும் அல்ல; மாற்றத்தை முன்னெடுக்கும் அன்புமணியின் ஃபார்முலா!”

” ‘எங்கள் மீது இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்’ என சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள். எதை மனதில் வைத்து அப்படிச் சொன்னீர்கள்?”
”இங்கே 100 சதவிகிதம் பெர்ஃபெக்ட் கட்சி என எதுவுமே இல்லை. எங்களிடமும் சில குறைகள் இருக்கலாம். அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்துகொள்கிறோம் எனச் சொன்னேன். கடந்த காலங்களில் செய்த பல தவறுகளைத் திருத்திக்கொண்டுவருகிறோம். நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு அரசியலில் உருவாகியிருக்கும் வெற்றிடத்தை நாங்கள் நிரப்பவிருக்கிறோம். தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அ.தி.மு.க-வுக்கு மீண்டும் ஆளும் வாய்ப்பைக் கொடுக்க மாட்டார்கள். தனக்கு வாக்களித்த மக்களை விஜயகாந்தும் ஏமாற்றிவிட்டார். அதனாலேயே இப்போது தமிழ்நாடு அரசியலில் மாற்றுச் சக்தியாக மக்கள் எங்களைப் பார்க்கிறார்கள்!”

”முதலமைச்சர் ஜெயலலிதாவை வீழ்த்த, தொடர்ந்து நீதிமன்றங்களையே நாடுகிறீர்களே… மக்கள் மன்றத்தில் அவரை வீழ்த்தும் வலிமையோ, பலமோ இல்லையா?”
”நீதிமன்றப் போராட்டம் இப்போது காலத்தின் கட்டாயம். ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நாங்கள் போராடி, ஆந்திரா போலீசார் மீது எஃப்.ஐ.ஆர் பதியவைத்தோம். மக்களிடமும் அந்தப் பிரச்னையை எடுத்துச்சென்றோம். அதேபோல ஜெயலலிதா வழக்கிலும் மேல்முறையீடு செய்து சட்டரீதியாகப் போராடுவதோடு, மக்கள் மன்றத்திலும் அவரை வீழ்த்துவோம்!”

”வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கிறது?”
”முதலமைச்சர் தன் அலுவலகத்துக்கு வருவதே அதிசயம்போல நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். முதலமைச்சர் அலுவலகத்துக்கு வருவது அரசு செய்திக் குறிப்பாக வருகிறது. அவரை வரவேற்க பேனர், கட்-அவுட் என பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற கொடுமையை எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பீர்களா?”

”ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்போடு இருக்கும் பா.ம.க., தமிழ்நாட்டில் எத்தனையாவது பெரிய கட்சி?”
”இதில் என்ன சந்தேகம்? நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. அரசியலில் நாங்கள் செய்த ஒரே தவறு, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டதுதான்!”

” ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோஷத்தோடு பல கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார் தொல்.திருமாவளவன். இது நீங்கள் உருவாக்க விரும்பும் கூட்டணிக்கு இடைஞ்சலாக இருக்குமா?”
”திருமாவுக்கு, கொள்கை… கோட்பாடு என எதுவும் இல்லை. ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன் கூட்டு என்பது கொள்கை அல்ல. உண்மையில் திருமா தி.மு.க-வுக்காக ஆள்பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால், தி.மு.க-வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. ‘வாங்க… வாங்க…’ எனக் கூப்பிட்டுக் கெஞ்சியும், யாரும் அந்தப் பக்கம் செல்லத் தயாராக இல்லை. அதனாலேயே கலைஞர் திருமாவிடம், ‘கூட்டணிக்கு ஆள் பிடிச்சிட்டு வா… கூட்டணியில பங்கு தர்றோம்’ எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். திருமாவும் அதைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திவருகிறார். ஆனால், எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு அமையும் கூட்டணிதான் தமிழ்நாட்டின் மாற்று என்கிறோம். ஆட்சி, கூட்டணி ஆட்சி என்கிறோம்!”

”உங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு யாரெல்லாம் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்?”
”நாங்கள் இன்னும் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இப்போது நாங்கள் மக்களிடம் வேலை செய்கிறோம். வரவிருக்கும் காலங்களில் எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.
பொதுமக்கள் யாரும் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆட்சி வேண்டும் எனக் கேட்கவில்லை. காமராஜர் ஆட்சிதான் வேண்டும் என்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் முதலமைச்சர்கள் திரையரங்கங்களில் இருந்தே வந்திருக்கிறார்கள். ஓர் ஆசிரியரோ, வழக்குரைஞரோ, மருத்துவரோ ஏன் முதலமைச்சராக வரக் கூடாது? படித்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என நான் நினைக்கிறேன்!”

”தலித் மக்களை எதிரிகளாக்கி வன்னியர்களை ஒருங்கிணைக்கிறீர்கள் என, உங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?”
”இது முழுக்கவே தவறான பிரசாரம். கடந்த காலங்களில் தலித் மக்களுக்கு நாங்கள் செய்த சேவைக்காக விருது கொடுத்தவர்களும், அரசியல்ரீதியாக எங்களை வீழ்த்த முடியாதவர்களுமே இப்படி பொய், புரட்டுகளைப் பரப்புகிறார்கள். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரே ஒரு தலித்துதான். எங்களின் முதல் மத்திய அமைச்சர் பதவியை, நாங்கள் தலித் எழில்மலைக்குத்தான் கொடுத்தோம். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் எனக்கும் மோதல் வந்தது. அவர் தலித்துகளுக்கு எதிராக இருந்தார். நான் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தேன். அதனால்தான் பிரச்னையே. ஆக, எப்போதுமே நாங்கள் தலித் மக்களுக்கு எதிரிகளாக இருந்தது கிடையாது. தலித் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் சில அமைப்புகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்!”

#Anbumani4cm

இளைய தலைமுறையின் கேள்விகளுக்கு அன்புமணியின் பதில்கள்

மாணவர்களின் கேள்விகளுக்கு மருத்துவர் அன்புமணியின் பதில்கள்
Part-1
Part-2

Part-3

இளைஞர்களின் பார்வையில் அன்புமணி..
அன்புமணியின் பார்வையில் அரசியல்..
(தொகுத்து வழங்கியவர்கள் தினமலர்)

#Anbumani4cm

Wednesday 6 May 2015

Gmail மெயில் மற்றும் Twitter ட்விட்டர் கணக்கு தொடங்குவது எப்படி ?

                            Gmail கணக்கு தொடங்குவது எப்படி ?
STEP-1
முதலில் ஏதாவது ஒரு Browser ல் www.gmail.com என்று டைப் செய்து Enter கொடுக்கவும்
பின்பு "Create an Account" என்பதை க்ளிக் செய்யவும்
Inline image 18
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-2
கீழ் உள்ள படத்தில் உள்ள இடங்களை தங்களது தகவல்களை கொடுத்து நிரப்பவும்  
Inline image 19
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-3
தங்களது தகவல்களை கொடுத்த பின்பு "Next Step" க்ளிக் செய்யவும் 
Inline image 21
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-4
தங்களது புகைப்படத்தை "Add Photo" என்ற option ஐ க்ளிக் செய்து வைத்துகொள்ளவும் 
Google+ கணக்கு உருவாக்க விருப்பம் இல்லை என்று "No Thanks" ஐ க்ளிக் செய்யவும் 

Inline image 22
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-5
"Continue to Gmail" என்பதை க்ளிக் செய்து தங்களது மின்னஞ்சல் கணக்கை உறுதி செய்துகொள்ளவும் 
Inline image 23
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-6
தங்களது Gmail கணக்கு தொடக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது 
"Go to Gmail" கொடுக்கவும் 
Inline image 24



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                        Twitter கணக்கு தொடங்குவது எப்படி ?
STEP-1
*முதலில் ஏதாவது ஒரு Browser ல் www.twitter.com என்று டைப் செய்து Enter கொடுக்கவும் 
*தாங்கள் முன்பே Email கணக்கு தொடங்கி இருக்க வேண்டும் 
*கீழ் கொடுக்கப்பட்ட முறைகளில் தகவல்களை டைப் செய்து Sign Up for Twitter என்பதை க்ளிக் செய்யவும் 
Inline image 1
---------------------------------------------------------------------------------------------------------------------
STEP-2
*உங்களது பெயர் 
*கடவுச்சொல் Password
*UserName 
ஆகியவற்றை டைப் செய்து Sign Up கொடுக்கவும் 
Inline image 2
------------------------------------------------------------------------------------------------------------------
STEP-3
*தங்களது Mobile Number கொடுத்து பின்பு Next கொடுக்கவும் 
Inline image 3
---------------------------------------------------------------------------------------------------------------------
STEP-4
*தாங்கள் கொடுத்த Mobile Number க்கு ஒரு SMS வரும் அதில் உள்ள Password ஐ 
கீழ் உள்ள இடத்தில் கொடுத்து Verify கொடுக்கவும் 
Inline image 4
----------------------------------------------------------------------------------------------------------------------
STEP-5
*Lets go என்பதை க்ளிக் செய்து அடுத்த செயல்பாட்டுக்கு செல்லவும் 
Inline image 5
-----------------------------------------------------------------------------------------------------------------------
STEP-6
*கீழ் உள்ளது போல உங்களுக்கு விருப்பமான பிரபலங்களின் கணக்கை 
FOLLOW பின்தொடர செலெக்ட் செய்து Continue கொடுக்கவும்  
Inline image 6
-----------------------------------------------------------------------------------------------------------------------
STEP-7
உங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்து பின்பு Follow கொடுக்கவும் 
Inline image 7
-----------------------------------------------------------------------------------------------------------------------
STEP-8
Upload Photo என்பதை க்ளிக் செய்து தங்களது புகைப்படத்தை முகப்புபடமாக 
வைத்துகொள்ளவும் பின்பு Continue கொடுக்கவும் 
Inline image 8
------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-9
*பின்பு கீழ் உள்ளது போல Skip this Step கொடுக்கவும் 
அல்லது உங்களது Email கணக்கில் உள்ள நபர்களை கண்டறிய " Upload your Gmail Contacts" 
என்பதை தேர்வு செய்து கொள்ளவும் 
Inline image 9
----------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-10
தற்போது தங்களது Twitter கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் ஆனால் அதை 
உறுதி செய்ய தங்களது Mail id க்கு Conformation Mail சென்றிருக்கும் 
எனவே தங்களது mail சென்று உறுதி செய்யவும் 
Inline image 10
---------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-11
உங்களது mail க்கு செல்லவும் 
Inline image 12
-------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-12
Inline image 13
----------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-13
உங்களது Mail inbox ல்  Social என்ற இடத்தில் க்ளிக் செய்து பார்க்கவும் 
Inline image 14
------------------------------------------------------------------------------------------------------------------------
STEP-14
Twitter உங்களுக்கு அனுப்பியுள்ள mail ஐ open செய்யவும்
Inline image 15
-----------------------------------------------------------------------------------------------------------------------
STEP-15
Confirm now என்பதை க்ளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் 
Inline image 16
----------------------------------------------------------------------------------------------------------------------
STEP-16
உங்கள் Twitter கணக்கு உறுதி செய்யப்பட்டதாக கீழ் உள்ளது போல செய்தி வரும் 
Inline image 25

தற்போது தங்களது மெயில் மற்றும் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது இதன் பயன்பாடுகள் மற்றும் செயல்படுத்தும் முறை அடுத்து பதிவில்..
தொடர்ந்திடுங்கள் இணைந்திடுங்கள்.. 
ஏதாவது சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 
+91 9952 48 9119

Monday 23 March 2015

Government should call for an all-party meet regarding Cauvery issue - Anbumani Ramadoss


மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக போராட்டம் 

"Government should call for an all-party meet regarding Cauvery issue"-Anbumani Ramadoss




மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி பாமக போராட்டம்

காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதை எதிர்த்து இன்று 23.03.2015 சென்னையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி, அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறி விடும். இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக மக்களின் ஒட்டு மொத்த பிரச்சினை. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது.
உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை டெல்லி அழைத்துச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. உடனே ஒரு மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டும். இதை செய்யாத தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
அவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. பெங்களூர் வழக்கில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல் காரணங்களால் எல்லா கட்சிகளும் ஒன்றுபடுவதில்லை.
இந்த கலாசாரம் மாற வேண்டும். இதில் கவுரவம் பார்க்க கூடாது. வருகிற 28–ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழக மக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 2016–ல் பா.ம.க. ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது உறுதி. அப்போது அரசியலிலும், அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்....