Wednesday 26 November 2014

நக்கீரன் (28-11.14) இதழில் மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேட்டி

நக்கீரன் (28-11.14) இதழில் மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேட்டி


பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணியை தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னி றுத்துகிறது பா.ம.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு. தி.மு.க., அ.தி. மு.க.வுக்கு எதிராக பா.ம.க. தலைமை யில் ஒரு மாற்று அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறார் மருத்துவர் ராமதாஸ்.
இந்நிலையில், கிராமங்களை தத்தெடுக்கும் பிரதமர் மோடியின் திட்டத்தின்படி தனது தர்மபுரி தொகுதியில் அடங்கிய மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்தெடுத்து அக்கிராமத்தில் ஆய்வு நடத்தி முடித்துவிட்டு வந்த மரு.அன்புமணியிடம் சில கேள்வி களை நக்கீரன் குழு பேட்டி எடுத்தது ..


கேள்வி பதில்கள் கீழ்..
தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி. மு.க.வை எதிர்த்தால்தான் பா.ம.க. அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் என்கிற திட்டத்தில் தானே கடுமையான விமர்சனங்களை மருத்துவர் ராமதாஸும் நீங்களும் முன்வைக்கிறீர்கள்?
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த துறைகளை பட்டியலிட்டால் அதில் கல்வியோ சுகாதாரமோ விவசாயமோ இருக்காது. மாறாக, மக்களின் சிந்தனையை மழுங் கடிக்கும் மதுவும் மக்களை சோம்பேறி களாக்கும் இலவச கலாச்சாரமும்தான் இருக்கும். தமிழகத்தில் 1967-ல் அண்ணா ஆட்சியைப் பிடித்தபோது, தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசு பள்ளிகள்தான் கல்வி கோயில்களாக இருந்தன. இந்த 50 ஆண்டு காலத்தில் அத்தகைய அரசு பள்ளிகள் தந்திரமாக சீரழிக்கப்பட்டு தனியார் களிடம் கல்வி தாரை வார்க்கப்பட்டுவிட்டது. தரமான மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இருந்த நிலை மாறி தனியார் மருத்துவ மனைகளில் லட்சங்களைக் கொட்டிக்கொடுத்தால்தான் தரமான மருத்துவம் கிடைக்கிற நிலை உருவாகிப் போனது. 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை எட்டி லாபமான தொழிலாக இருந்த வேளாண்மை மைனஸ் 12-க்கு போய் விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகும் சூழல் வந்தது. இப்படி எல்லா துறைகளிலும் அவலங்களும் ஊழல்களும் பல்கிப் பெருகிவிட்டதை பட்டியலிட முடியும்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி அரசியல் இதற்கு முன்பும் பல உருவாகி அவை ஒரு தேர்தலோடு முடிந்துபோன நிலையில், பா.ம.க. உருவாக்கும் மாற்று அணியும் அந்த வரிசையில்தான் இடம் பெறுமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்கிறார்களே?
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக வலுவான ஒரு அணி இதுவரை உருவாகவில்லை என்பது என் கருத்து. ஆனால், முதன்முதலில் பா.ம.க. தலைமையில் உருவாகும் அந்த மாற்று அணி மிக வலிமையாக இருக்கும். திராவிட இயக்கங்களின் 50 ஆண்டு கால ஆட்சி 2016-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவிருக்கிறது. இது காலத்தின் கட்டளை. பா.ம.க. தலைமையில் உருவாகும் மாற்று அணி 2016-ல் ஆட்சியை பிடிக்கும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும் இதே போன்று தான் பா.ம.க. தலைமையில் மாற்று அணி என்று ஓங்கி குரல் கொடுத்தீர்கள். ஆனால், தேர்தல் வந்ததும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துவிட்டீர்கள். அந்த வகையில், இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரசவ நேர வைராக்கியம் போல மீண்டும் மாற்று அணி அரசியலை கையிலெடுத்திருப்பது போலத்தானே தோன்றுகிறது?
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விரும்பும் மாற்றத்தை தமிழகத்திலுள்ள எந்த கட்சியாலும் வழங்க முடியவில்லை. மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியை எடுக்க கடந்த காலங்களில் பா.ம.க. தவறி விட்டது. அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அந்த முயற்சியை எடுக்க தீர்மானித்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசத்திற்கான தேர்தல். தேசத்தின் நலன் கருதி மோடியை பிரதமராக்க வேண்டிய கடமை பா.ம.க. வுக்கும் இருந்ததால் பா.ஜ.க. கூட்டணிக்குள் செல்ல வேண்டியதாயிற்று. இப்போது புதிய சிந்தனை, புதிய பார்வை, புதிய பாதை, புதிய இலக்கு என்கிற கோட்பாடுகளுடன் மாற்று அணிக்கான முயற்சியை தீவிரமாக எடுத்துள் ளோம். இனி, இதில் சமரசத்திற்கே இடமில்லை.
பா.ம.க. தலைமையில் உருவாகும் மாற்று அணியில் பா.ஜ.க.வுக்கு அழைப்பில் லையே?
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைத் தவிர்த்து பா.ம.க. தலைமையை ஏற்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும் மாற்று அணிக்குள் வரலாம். இதில் பா.ஜ.க.வும் விதிவிலக்கல்ல. அதேசமயம், சில கட்சிகளை நாங்கள் அரசியல் கட்சிகளாகவே பார்ப்பதில்லை.
மாற்று அணி அரசியலை முன்னெடுப்ப தால் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகி விட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?
மத்தியில் பா.ஜ.க. தலைமையில் அமையும் ஆட்சிக்கு 5 வருடமும் பா.ம.க.வின் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக குடியரசு தலைவரிடம் பா.ம.க. கடிதம் தந்திருக்கிறது. அதே நேரத்தில் மகா ராஷ்டிராவிலுள்ள சிவசேனா கட்சி, பஞ்சாப்பி லுள்ள சிரோன்மனி அகாலிதள கட்சி ஆகியவை மத்தியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவும் மாநிலத்தில் மாற்று அணி அரசியலில் இருப்பது போல தமிழகத்தில் எங்கள் நிலைப்பாடும் இருக்கிறது.
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக பலரும் முன்னிறுத்தப்படும் நிலையில், பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக உங்களை, உங்கள் கட்சி அடையாளப்படுத்துவதை எப்படி உணர்கிறீர்கள்?
ஒரு பெரிய சுமை என்மீது வைக்கப்பட்டி ருப்பதாகத்தான் உணர்கிறேன். தொண்டர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை பிரமிக்கத் தக்கதாக இருக்கிறது. நிச்சயம் அவர்களது நம்பிக்கையை காப்பாற்றுவேன். ஆனால் கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும். 2016-ல் பா.ம.க. ஆட்சிக்கு வரும்போது, போடப்படும் முதல் கையெழுத்து, மதுவிலக்கை அமல்படுத்துவதுதான். அடுத்து கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கான இடுபொருட்கள் ஆகிய 3 மட்டுமே இலவசமாகத் தருவோம். மற்ற இலவசங்கள் முழுமையாக அகற்றப்படும். இதுதான் எங்களின் சபதம்.

-Magesh G Kshathriyan 
(https://www.facebook.com/mageshcheyyur)
(https://twitter.com/MageshCheyyur)

No comments:

Post a Comment