Monday 17 June 2013

வைகோவின் "மகள்" புனிதவதி யார்?

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகள் நான் என்று கூறி புனிதவதி என்பவர் ஜூனியர் விகடன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கண்ணீர் பேட்டி கொடுத்திருந்தார். அந்த புனிதவதியின் கூற்றுப்படி, வைகோ, வையாபுரி கோபால்சாமியாக இருந்த மாணவ பருவத்தில், சென்னை சட்டக்கல்லூரியில் படித்தபோது திருக்கோவிலூரைச் சேர்ந்த மாலினி என்கிற ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய்க் காதலித்தாராம். அவர்களின் காதலுக்கு சாட்சி மாலினியின் வயிற்றில் கருவாக வளர்ந்த நிலையில், ஊருக்குப்போய் தனது தாயின் சம்மதத்தை பெற்று வந்து திருமணம் முடிக்கிறேன் என்று வைகோ தனது சொந்த ஊருக்குப் போனார். போனவர் சென்னைக்குத் திரும்பவில்லை. திருநெல்வேலியில் அப்போது பிரபல வழக்கறிஞராக இருந்த ரத்னவேல் பாண்டியனிடம் ஜூனியராக வழக்கறிஞர் வேலைக்கு சேர்ந்து மாலினியை மறந்துவிட்டார்.
மாலினி வயிற்றில் வளரும் கருவை வைகோ மறக்கலாம். மாலினியால் மறக்க முடியுமா? இல்லை மறைக்கத்தான் முடியுமா? அவர் நேரே கிளம்பி வைகோவின் சொந்த ஊருக்குப்போய் வைகோவின் அம்மாவிடம் நியாயம் கேட்க, வைகோவுக்கு தங்களின் சொந்தத்தில், நல்ல வசதியான இடத்துப் பெண்ணை மணமுடிக்கும் நிலையில் மாலினியின் திடீர் வருகை அவர்களுக்கு பேரிடியாக இறங்க, வைகோவின் மூத்த சகோதரி (இவர் கிறித்தவ மதத்திற்கு மாறியிருந்தவர்) மாலினியை தனக்கு வேண்டப்பட்ட கிறித்தவ மிஷனரியில் சேர்த்து ஊரார் பார்வையிலிருந்து மறைத்து விட்டார். மாலினிக்கும் வைகோவுக்கும் பிறந்த மகள் நான் தான் என்று புனிதவதி கொடுத்த பேட்டி ஜூனியர் விகடனில் வந்தது. இதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் புனிதவதி பகிரங்கமாக சவால் விட்டார்.

“பொதுவாழ்வில் நேர்மை” என்கிற கோஷத்தை தனது கட்சியின் முதல் முழக்கமாக கொண்ட வைகோவின் சொந்த வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு குறித்து, அவர் மகள் என்று கூறிய அந்த பெண்ணின் பேட்டிக்கு இன்றுவரை வைகோ முறையான பதில் சொல்லவில்லை. அர்த்தமுள்ள மவுனம் மட்டுமே அவரது ஒரே பதில். தனக்கு நெருங்கிய ஆட்களிடம் இதெல்லம் கருணாநிதி தனக்கு எதிராக செய்யும் சதி என்று சொன்னதைத்தவிர, புனிதவதியின் சவாலை வைகோ இன்றுவரை பகிரங்கமாக எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

இந்த மாதிரி பிரச்சனைகளில் யார் சொல்வது சரி என்பதை மரபணு பரிசோதனை மூலம் தீர்க்க விஞ்ஞானத்தில் வழியிருக்கிறது. "விதி" என்கிற பிரபலமான திரைப்படம் முதல் வேறுபல உண்மைச் சம்பவங்களிலும் இது சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை, இன்றுவரை வைகோ அந்த வழியை நாடவில்லை. இந்த பின்னணியில் வைகோவுக்கு திருமணத்திற்கு முன்பு பிறந்த மகள் நான் என்று புனிதவதி சொல்வதை நம்புவதைத் தவிர எதிரொலிக்கு வேறு வழியில்லை.

ஆக வைகோவின் இளமைக் காதலுக்கு அவரது "மகள்" புனிதவதியே சாட்சி.
நன்றி - எதிரொலி

No comments:

Post a Comment