Sunday 28 December 2014

பா.ம.க.வின் மாநில, மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் 28.12.14

2016–ம் ஆண்டு பாமக தலைமையில் தேர்தலை சந்திப்பது உறுதி: மருத்துவர் ராமதாஸ்


திண்டிவனம் என்.பி.சி. திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் மாநில, மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் 2–வது நாளாக நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
ஏப்ரல் 10–ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். உங்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகள் திறம்பட செய்ய வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் சுய பரிசோதனை செய்வது மிகமிக முக்கியம். கடந்தாண்டில் என்ன செய்தோம், எதை செய்ய தவறினோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1989–ல் ஜூலை மாதம் சென்னை கடற்கரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடி ஆரம்பித்த கட்சி. முதலில் ஒரு எம்.எல்.ஏ. பின்னர் 4 எம்.எல்.ஏ.க்கள் என வெற்றிபெற்றோம். தொடர்ந்து தனித்து போட்டியிட்டு இருந்தால் 2006 அல்லது 2011–ல் ஆட்சியை பிடித்து இருப்போம். தவறு செய்து விட்டோம். 1991–ல் பா.ம.க. தலைமையில் முஸ்லிம் லீக் கட்சி, குடியரசு கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சிகளை வைத்து அப்போதே சிறிய கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். பாதை மாறினோம், வழிமாறினோம்.
இந்த தவறுகளை எல்லாம் நினைவுபடுத்தி பா.ம.க. தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்பதை இளைஞர்களுக்கு தெரிவிக்கிறோம். 1989–ல் கட்சி ஆரம்பித்த 4 மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு தர்மபுரியில் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள், மற்ற தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்தோம். பா.ம.க. தலைமையில் 2016–ல் அமைய இருக்கும் கூட்டணிக்கு சமூக ஜனநாயக கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது.
நிதியுடன் கூடிய சமத்துவம், சமூக ஒருமைப்பாடு, தத்துவத்தை, ஜனநாயக மனிதநேயத்தை கடைபிடித்து வரும் பா.ம.க.வை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். எனவே நிர்வாகிகள் தேனீக்கள் போன்று செயல்பட வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ. வாய்ப்பை இழந்தவர்கள், எம்.எல்.ஏ.வாக உள்ளவர்கள் ஒரு மாதிரி தொகுதியை எடுத்து பொறுப்பேற்று நிர்வாகிகளிடம் குழுக்களை பிரித்து கிராம கூட்டங்களை நடத்த வேண்டும். முக்கியமாக கிராம கூட்டங்களை நடத்தினால்தான் தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றிபெற்றார். தமிழக வரலாற்றில் கலப்பினர் காலம்தான் இருண்டகாலமாகும். தற்போது நடப்பதும் இருண்டகால ஆட்சிதான்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

No comments:

Post a Comment