Tuesday 3 March 2015

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியதன் முழு விபரம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியதன் முழு விபரம்.

'காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைகளை கட்டி காவிரி நீரை முற்றிலுமாக பயன்படுத்த கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாகவும் மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பில், "காவிரியில் புதிய திட்டங்களோ மாற்றமோ செய்ய விரும்பினால் நீர் ஆதாரம் கொண்ட மாநிலம், நீர் பெறும் மாநிலங்களின் அனுமதியை பெற வேண்டும்' என தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால் அதை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது. ஏற்கெனவே, தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதில்லை. உபரி நீரைத்தான் தமிழகம் இப்போதும் பெற்று வருகிறது.
இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண உடனடியாக சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநில முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்துப் பேச வேண்டும்'

Dam across River Cauvery at Megathathu 

No comments:

Post a Comment