2015-16 பட்ஜெட் குறித்து புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகள் நான் என்று கூறி புனிதவதி என்பவர் ஜூனியர் விகடன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கண்ணீர் பேட்டி கொடுத்திருந்தார். அந்த புனிதவதியின் கூற்றுப்படி, வைகோ, வையாபுரி கோபால்சாமியாக இருந்த மாணவ பருவத்தில், சென்னை சட்டக்கல்லூரியில் படித்தபோது திருக்கோவிலூரைச் சேர்ந்த மாலினி என்கிற ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய்க் காதலித்தாராம். அவர்களின் காதலுக்கு சாட்சி மாலினியின் வயிற்றில் கருவாக வளர்ந்த நிலையில், ஊருக்குப்போய் தனது தாயின் சம்மதத்தை பெற்று வந்து திருமணம் முடிக்கிறேன் என்று வைகோ தனது சொந்த ஊருக்குப் போனார். போனவர் சென்னைக்குத் திரும்பவில்லை. திருநெல்வேலியில் அப்போது பிரபல வழக்கறிஞராக இருந்த ரத்னவேல் பாண்டியனிடம் ஜூனியராக வழக்கறிஞர் வேலைக்கு சேர்ந்து மாலினியை மறந்துவிட்டார்.

